கோபம்
Thirukkural for anger
கோபம் வரும்போது அதை அடக்குவது எளிதல்ல. கோபம் நம்மையே அழிக்கும் தீ என்று வள்ளுவர் எச்சரித்து, அமைதியின் பலனைச் சொல்கிறார்.
Anger is hard to hold back when it rises. Valluvar calls it a fire that consumes the angry person first, and praises the calm that follows letting it go.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 305வெகுளாமை · Restraining Anger
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
கலைஞர் உரை
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him
குறள் 304வெகுளாமை · Restraining Anger
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
கலைஞர் உரை
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்
What other foe to man works such annoy?
குறள் 303வெகுளாமை · Restraining Anger
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
கலைஞர் உரை
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்
Forget anger towards every one, as fountains of evil spring from it
குறள் 306வெகுளாமை · Restraining Anger
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
கலைஞர் உரை
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்
The fire of anger will burn up even the pleasant raft of friendship
குறள் 307வெகுளாமை · Restraining Anger
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
கலைஞர் உரை
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail
குறள் 301வெகுளாமை · Restraining Anger
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
கலைஞர் உரை
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?
தொடர்புடைய சூழல்கள் · Related situations