வேலைக்குச் சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்தல்
Thirukkural for choosing the right people for the job
யாரிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைப்பது என்று யோசிக்கிறீர்களா? திறனை ஆராய்ந்து, பொருத்தமானவரிடம் பணியை விடுவதன் வழியை வள்ளுவர் காட்டுகிறார்.
Deciding whom to trust with which task? Valluvar advises studying a person’s character and ability first, then entrusting the work to the right one.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 511தெரிந்து வினையாடல் · Selection and Employment
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
கலைஞர் உரை
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking
குறள் 513தெரிந்து வினையாடல் · Selection and Employment
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
கலைஞர் உரை
அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness
குறள் 517தெரிந்து வினையாடல் · Selection and Employment
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
கலைஞர் உரை
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty
குறள் 518தெரிந்து வினையாடல் · Selection and Employment
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
கலைஞர் உரை
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈடுபடுத்த வேண்டும்
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work
குறள் 516தெரிந்து வினையாடல் · Selection and Employment
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
கலைஞர் உரை
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it
தொடர்புடைய சூழல்கள் · Related situations