மேடைப் பயம்

Thirukkural for fear of speaking in public
பலர் முன் பேசப் பயமா? கற்றதை அவையில் அஞ்சாமல் சொல்லும் திறனின் மதிப்பையும் அதற்கான முயற்சியையும் வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
Nervous about speaking before a crowd? Valluvar explains why being able to share what you know with confidence matters, and how to build that courage.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 722
அவை அஞ்சாமை · Not to dread the Council
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
கலைஞர் உரை
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned
குறள் 723
அவை அஞ்சாமை · Not to dread the Council
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
கலைஞர் உரை
அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned)
குறள் 724
அவை அஞ்சாமை · Not to dread the Council
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
கலைஞர் உரை
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning)
குறள் 726
அவை அஞ்சாமை · Not to dread the Council
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
கலைஞர் உரை
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?
குறள் 729
அவை அஞ்சாமை · Not to dread the Council
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
கலைஞர் உரை
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate
உங்கள் சூழல் வேறா? / Your situation is different?
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் · Describe your own situation

தொடர்புடைய சூழல்கள் · Related situations