துன்பமும் நம்பிக்கையின்மையும்
Thirukkural for hard times and hopelessness
எல்லாம் இருண்டு போனது போலத் தோன்றுகிறதா? துன்பத்தைக் கண்டு சிரிக்கும் மனத்திடமே அதை வெல்லும் என்று வள்ளுவர் நம்பிக்கை தருகிறார்.
When everything feels dark, Valluvar offers courage: meet trouble with a steady heart, and the trouble itself will tire and retreat.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 621இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
கலைஞர் உரை
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow
குறள் 622இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
கலைஞர் உரை
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow
குறள் 623இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
கலைஞர் உரை
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow
குறள் 625இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
கலைஞர் உரை
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose)
குறள் 597ஊக்கம் உடைமை · Energy
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
கலைஞர் உரை
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows
குறள் 620ஆள்வினை உடைமை · Manly Effort
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
கலைஞர் உரை
``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back
தொடர்புடைய சூழல்கள் · Related situations