உறவினர்களும் குடும்ப ஆதரவும்
Thirukkural for relatives and family support
உறவுகளைத் தக்கவைப்பதும் அவர்களுடன் பகிர்ந்துண்பதும் ஒரு கலை. உறவினர்கள் சூழ வாழ்வதன் மதிப்பை வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
Keeping relatives close takes generosity and warm words. Valluvar explains why a life surrounded by kin is worth more than wealth alone.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 524சுற்றந் தழால் · Cherishing Kinsmen
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
கலைஞர் உரை
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth
குறள் 522சுற்றந் தழால் · Cherishing Kinsmen
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
கலைஞர் உரை
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்
If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealth
குறள் 521சுற்றந் தழால் · Cherishing Kinsmen
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
கலைஞர் உரை
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness)
குறள் 525சுற்றந் தழால் · Cherishing Kinsmen
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
கலைஞர் உரை
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்
He will be surrounded by numerous relatives who manifests generosity and affability
குறள் 527சுற்றந் தழால் · Cherishing Kinsmen
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
கலைஞர் உரை
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும் அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)
தொடர்புடைய சூழல்கள் · Related situations