பழிவாங்கும் எண்ணமும் மன்னிப்பும்
Thirukkural for revenge and forgiveness
தீங்கு செய்தவரைத் திருப்பித் தாக்க மனம் துடிக்கிறதா? தீமைக்கு நன்மை செய்து அவர்களை வெட்கப்படச் செய்யும் வள்ளுவரின் வழி இது.
Tempted to hit back at someone who wronged you? Valluvar suggests a harder, wiser path: forgive, forget, and let kindness be your answer.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 314இன்னா செய்யாமை · Not doing Evil
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
கலைஞர் உரை
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides
குறள் 312இன்னா செய்யாமை · Not doing Evil
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
கலைஞர் உரை
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil
குறள் 108செய்ந்நன்றியறிதல் · Gratitude
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
கலைஞர் உரை
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)
குறள் 152பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
கலைஞர் உரை
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that
குறள் 156பொறையுடைமை · The Possession of Patience, Forbearance
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
கலைஞர் உரை
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்
The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world
குறள் 319இன்னா செய்யாமை · Not doing Evil
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
கலைஞர் உரை
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening
தொடர்புடைய சூழல்கள் · Related situations