சரியான நேரத்திற்காகக் காத்திருத்தல்
Thirukkural for waiting for the right time
அவசரப்படாமல் சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய நேரமா இது? பொறுமையும் விழிப்பும் எவ்வாறு வெற்றி தரும் என்பதை வள்ளுவர் சொல்கிறார்.
Is this a time to wait rather than rush? Valluvar teaches that patience, and acting the moment the right opportunity comes, wins what force cannot.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 482காலமறிதல் · Knowing the fitting Time
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
கலைஞர் உரை
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)
குறள் 483காலமறிதல் · Knowing the fitting Time
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.
கலைஞர் உரை
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
குறள் 485காலமறிதல் · Knowing the fitting Time
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
கலைஞர் உரை
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world
குறள் 486காலமறிதல் · Knowing the fitting Time
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
கலைஞர் உரை
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt
குறள் 489காலமறிதல் · Knowing the fitting Time
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
கலைஞர் உரை
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity)
குறள் 490காலமறிதல் · Knowing the fitting Time
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
கலைஞர் உரை
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity
தொடர்புடைய சூழல்கள் · Related situations