Thirukkural for letting go

பற்றை விடுதல்

எதையோ இறுகப் பற்றிக்கொண்டு மனம் வலிக்கிறதா? எதிலிருந்து விடுபடுகிறோமோ அதனால் வரும் துன்பமும் நீங்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
Holding on to something that keeps hurting? Valluvar says whatever we truly let go of can no longer cause us pain.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 341 · துறவு · Renunciation
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.
கலைஞர் உரை
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain
குறள் 347 · துறவு · Renunciation
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர் க்கு.
கலைஞர் உரை
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன
Sorrows will never let go their hold of those who give not up their hold of desire
குறள் 360 · மெய்யுணர்தல் · Truth-Conciousness
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.
கலைஞர் உரை
விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்
If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)
குறள் 350 · துறவு · Renunciation
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.
கலைஞர் உரை
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்
Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire