வாழ்க்கை நிலையற்றது
Thirukkural for life being short
காலம் வேகமாக ஓடுவதாக உணர்கிறீர்களா? நிலையற்ற வாழ்வில் நல்லதை இன்றே செய்துவிட வேண்டும் என்று வள்ளுவர் நினைவூட்டுகிறார்.
Feeling that time is slipping by? Valluvar reminds us that nothing lasts, so the good we mean to do is best done today.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 334நிலையாமை · Instability
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
கலைஞர் உரை
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life
குறள் 335நிலையாமை · Instability
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
கலைஞர் உரை
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்
Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent
குறள் 333நிலையாமை · Instability
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
கலைஞர் உரை
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable
குறள் 337நிலையாமை · Instability
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
கலைஞர் உரை
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment
குறள் 331நிலையாமை · Instability
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
கலைஞர் உரை
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise)
தொடர்புடைய சூழல்கள் · Related situations