பெற்றோரைப் பெருமைப்படுத்துதல்

Thirukkural for making your parents proud
பெற்றோரின் தியாகத்துக்கு நாம் செய்யும் சிறந்த நன்றி, அவர்கள் பெருமைப்படும்படி வாழ்வது. அதைப் பற்றி வள்ளுவர் சொல்வதைப் பாருங்கள்.
The best thanks we can give our parents is a life that makes them proud. Here is what Valluvar says about children who bring joy to their parents.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 70
மக்கட்பேறு · The Wealth of Children
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.
கலைஞர் உரை
``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்
(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father
குறள் 69
மக்கட்பேறு · The Wealth of Children
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
கலைஞர் உரை
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth
குறள் 68
மக்கட்பேறு · The Wealth of Children
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
கலைஞர் உரை
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves
உங்கள் சூழல் வேறா? / Your situation is different?
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் · Describe your own situation

தொடர்புடைய சூழல்கள் · Related situations