Thirukkural for old friends

பழைய நட்பு

நெடுநாள் நண்பர் ஏதோ வருத்தம் தந்துவிட்டாரா? உரிமையோடு செய்வதைப் பொறுத்து, பழைய நட்பைக் கைவிடாதவரை உலகமே நேசிக்கும் என்கிறார் வள்ளுவர்.
Hurt by an old friend? Valluvar says true friends bear with what is done out of closeness, and the world loves those who never give up a long friendship.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 806 · பழைமை · Familiarity
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
கலைஞர் உரை
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends
குறள் 807 · பழைமை · Familiarity
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர்.
கலைஞர் உரை
தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்
Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin
குறள் 810 · பழைமை · Familiarity
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.
கலைஞர் உரை
பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்
Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends
குறள் 802 · பழைமை · Familiarity
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்.
கலைஞர் உரை
பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்
The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise
குறள் 808 · பழைமை · Familiarity
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின்.
கலைஞர் உரை
நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்
To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault