Thirukkural for rifts within the family

குடும்பத்துக்குள் பகை

சொந்தங்களுக்குள் மனக்கசப்பு வளர்கிறதா? உள்ளுக்குள் இருக்கும் சிறிய பகையும் குடும்பத்தைத் தேய்த்துவிடும் என்று வள்ளுவர் கவனமாக எச்சரிக்கிறார்.
Is resentment growing among your own people? Valluvar warns that even a small hidden grudge can slowly wear a family down, like iron under a file.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 887 · உட்பகை · Enmity within
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.
கலைஞர் உரை
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்
Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid
குறள் 888 · உட்பகை · Enmity within
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.
கலைஞர் உரை
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away
குறள் 889 · உட்பகை · Enmity within
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.
கலைஞர் உரை
எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it
குறள் 881 · உட்பகை · Enmity within
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.
கலைஞர் உரை
இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்
Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain
குறள் 882 · உட்பகை · Enmity within
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.
கலைஞர் உரை
வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly