அன்புக்குரியவரைப் பிரிந்த ஏக்கம்
Thirukkural for missing someone you love
தொலைவில் இருக்கும் அன்புக்குரியவரை நினைத்து ஏங்குகிறீர்களா? பிரிவின் வலியையும் நினைவுகளின் ஆறுதலையும் வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்.
Longing for someone far away is a feeling Valluvar understood deeply. These kurals speak of the ache of separation and the comfort of memory.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 1158பிரிவு ஆற்றாமை · Separation unendurable
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
கலைஞர் உரை
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover
குறள் 1206நினைந்தவர் புலம்பல் · Sad Memories
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
கலைஞர் உரை
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
குறள் 1204நினைந்தவர் புலம்பல் · Sad Memories
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
கலைஞர் உரை
என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?
He continues to abide in my soul, do I likewise abide in his ?
குறள் 1207நினைந்தவர் புலம்பல் · Sad Memories
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
கலைஞர் உரை
மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?
குறள் 1210நினைந்தவர் புலம்பல் · Sad Memories
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
கலைஞர் உரை
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul
தொடர்புடைய சூழல்கள் · Related situations