வறுமையும் பணத்தட்டுப்பாடும்
Thirukkural for poverty and money struggles
பணத்தட்டுப்பாடு மனதை வாட்டுகிறதா? வறுமையின் துயரத்தை வள்ளுவர் மறைக்கவில்லை; ஆனால் உழைப்பும் உறுதியும் வழிகாட்டும் என்றும் சொல்கிறார்.
Money worries can wear you down. Valluvar does not hide how hard poverty is, yet he says energy and effort will in time find their reward.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 1041நல்குரவு · Poverty
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
கலைஞர் உரை
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை
There is nothing that afflicts (one) like poverty
குறள் 1045நல்குரவு · Poverty
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
கலைஞர் உரை
வறுமையெனும் துன்பத்திற்குள்ளிருந்து பல்வேறு வகையான துன்பங்கள் கிளர்ந்தெழும்
The misery of poverty brings in its train many (more) miseries
குறள் 616ஆள்வினை உடைமை · Manly Effort
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
கலைஞர் உரை
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்
Labour will produce wealth; idleness will bring poverty
குறள் 594ஊக்கம் உடைமை · Energy
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
கலைஞர் உரை
உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்
Wealth will find its own way to the man of unfailing energy
குறள் 593ஊக்கம் உடைமை · Energy
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
கலைஞர் உரை
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."
தொடர்புடைய சூழல்கள் · Related situations