Thirukkural for thinking twice before doing harm

தீங்கு செய்ய அஞ்சுதல்

கோபத்திலோ கஷ்டத்திலோ ஒருவருக்குத் தீங்கு செய்யத் தோன்றுகிறதா? தீமை நிழல்போல் நம்மையே தொடரும் என்பதால், அதைத் தீயைவிட அஞ்ச வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
Tempted, in anger or hardship, to harm someone? Valluvar says harm follows the one who does it like a shadow, so fear it more than fire.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 202 · தீவினையச்சம் · Dread of Evil Deeds
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.
கலைஞர் உரை
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
Because evil produces evil, therefore should evil be feared more than fire
குறள் 206 · தீவினையச்சம் · Dread of Evil Deeds
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
கலைஞர் உரை
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்
Let him not do evil to others who desires not that sorrows should pursue him
குறள் 209 · தீவினையச்சம் · Dread of Evil Deeds
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்.
கலைஞர் உரை
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது
If a man love himself, let him not commit any sin however small
குறள் 205 · தீவினையச்சம் · Dread of Evil Deeds
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து.
கலைஞர் உரை
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still
குறள் 208 · தீவினையச்சம் · Dread of Evil Deeds
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று.
கலைஞர் உரை
ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not