சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 1081

காமத்துப்பால் · களவியல் · அதிகாரம் 109: தகை அணங்குறுத்தல் (The Pre-marital love)
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
கலைஞர் மு. கருணாநிதி உரை
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்
மு. வரதராசனார் உரை
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
சாலமன் பாப்பையா உரை
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
English meaning
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed
Is it an angel? A fair peacock Or jewelled belle? To my mind a shock!
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation