சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 1176

காமத்துப்பால் · கற்பியல் · அதிகாரம் 118: கண் விதுப்பழிதல் (Eyes consumed with Grief)
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
கலைஞர் மு. கருணாநிதி உரை
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!
மு. வரதராசனார் உரை
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!
சாலமன் பாப்பையா உரை
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.
English meaning
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering) Oh! I am much delighted
Lo! eyes that wrought this love-sickness Are victims of the same themselves
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation