சூழல் குறள் · Ask Thiruvalluvarதிருக்குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை
மு. வரதராசனார் உரை
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சாலமன் பாப்பையா உரை
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
English meaning
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind
Justice is upright, unbending And free from crooked word-twisting
இந்தக் குறள் பேசும் சூழல்கள் / Situations this kural speaks to