சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 1211

காமத்துப்பால் · கற்பியல் · அதிகாரம் 122: கனவுநிலை உரைத்தல் (The Visions of the Night)
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
கலைஞர் மு. கருணாநிதி உரை
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
மு. வரதராசனார் உரை
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
சாலமன் பாப்பையா உரை
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?
English meaning
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?
How shall I feast this dream-vision That brings the beloved's love-mission?
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation