சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 137

அறத்துப்பால் · இல்லறவியல் · அதிகாரம் 14: ஒழுக்கம் உடைமை (The Possession of Decorum)
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
கலைஞர் மு. கருணாநிதி உரை
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்
மு. வரதராசனார் உரை
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை
ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்.
English meaning
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace
Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation