சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 195

அறத்துப்பால் · இல்லறவியல் · அதிகாரம் 20: பயனில சொல்லாமை (Against Vain Speaking)
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்
மு. வரதராசனார் உரை
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
English meaning
If the good speak vain words their eminence and excellence will leave them
Glory and grace will go away When savants silly nonsense say
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation