சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 30

அறத்துப்பால் · பாயிரவியல் · அதிகாரம் 3: நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
கலைஞர் மு. கருணாநிதி உரை
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்
மு. வரதராசனார் உரை
எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
English meaning
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness
With gentle mercy towards all, The sage fulfils the vitue's call
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation