சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 426

பொருட்பால் · அரசியல் · அதிகாரம் 43: அறிவுடைமை (The Possession of Knowledge)
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
கலைஞர் மு. கருணாநிதி உரை
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்
மு. வரதராசனார் உரை
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை
உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.
English meaning
To live as the world lives, is wisdom
As moves the world so move the wise In tune with changing times and ways
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation