சூழல் குறள் · Ask Thiruvalluvar

திருக்குறள் 95

அறத்துப்பால் · இல்லறவியல் · அதிகாரம் 10: இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
கலைஞர் மு. கருணாநிதி உரை
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது
மு. வரதராசனார் உரை
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா உரை
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
English meaning
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)
To be humble and sweet words speak No other jewel do wise men seek
உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற குறளைத் தேடுங்கள்
உங்கள் சூழலைச் சொல்லுங்கள் / Describe your situation