விதியும் துரதிர்ஷ்டமும்
Thirukkural for bad luck and fate
எவ்வளவு முயன்றும் அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லையா? விதியின் வலிமையையும், அதை மீறி முயற்சி தரும் பலனையும் வள்ளுவர் ஒருசேர உணர்த்துகிறார்.
Trying hard but luck will not turn? Valluvar speaks honestly about the power of fate, and just as firmly about the reward of unwavering effort.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 379ஊழ் · Fate
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?
கலைஞர் உரை
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?
How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?
குறள் 380ஊழ் · Fate
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
கலைஞர் உரை
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)
குறள் 619ஆள்வினை உடைமை · Manly Effort
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
கலைஞர் உரை
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward
குறள் 620ஆள்வினை உடைமை · Manly Effort
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
கலைஞர் உரை
``ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back
குறள் 618ஆள்வினை உடைமை · Manly Effort
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
கலைஞர் உரை
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace
தொடர்புடைய சூழல்கள் · Related situations