நடுநிலைமை
Thirukkural for being fair and impartial
உறவுக்கும் நீதிக்கும் இடையே முடிவெடுக்க வேண்டிய சூழலா? தராசுபோல் சாயாமல் நிற்பதே பெரியோர்க்கு அழகு என்று வள்ளுவர் சொல்கிறார்.
Caught between loyalty and fairness? Valluvar says to be like a balanced scale, leaning to neither side, and never to gain by what is unjust.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 111நடுவு நிலைமை · Impartiality
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
கலைஞர் உரை
பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue
குறள் 113நடுவு நிலைமை · Impartiality
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
கலைஞர் உரை
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity
குறள் 118நடுவு நிலைமை · Impartiality
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
கலைஞர் உரை
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise
குறள் 119நடுவு நிலைமை · Impartiality
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
கலைஞர் உரை
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும் அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind
குறள் 115நடுவு நிலைமை · Impartiality
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
கலைஞர் உரை
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both)
தொடர்புடைய சூழல்கள் · Related situations