புறங்கூறலும் வதந்தியும்
Thirukkural for gossip and backbiting
முதுகுக்குப் பின்னால் பேசப்படுவதை அறிந்து வருந்துகிறீர்களா, அல்லது நீங்களே புறம் பேசிவிட்டோமோ என்று நினைக்கிறீர்களா? இரண்டுக்கும் வள்ளுவர் வழி காட்டுகிறார்.
Hurt by talk behind your back, or worried you have been gossiping yourself? Valluvar has plain words for both sides of backbiting.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 182புறங்கூறாமை · Not Backbiting
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
கலைஞர் உரை
ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue
குறள் 184புறங்கூறாமை · Not Backbiting
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
கலைஞர் உரை
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it
குறள் 187புறங்கூறாமை · Not Backbiting
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
கலைஞர் உரை
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives
குறள் 188புறங்கூறாமை · Not Backbiting
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
கலைஞர் உரை
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
குறள் 190புறங்கூறாமை · Not Backbiting
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
கலைஞர் உரை
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?
தொடர்புடைய சூழல்கள் · Related situations