என் குறைகளை உணர்தல்
Thirukkural for facing your own faults
நம் தவறுகளை ஒப்புக்கொள்வது கடினம், ஆனால் அதுவே வளர்ச்சியின் தொடக்கம். குறைகளைக் களையும் வழியை வள்ளுவர் காட்டுகிறார்.
Admitting our own mistakes is hard, yet it is where growth begins. Valluvar shows why spotting and fixing our faults comes before judging others.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 190புறங்கூறாமை · Not Backbiting
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
கலைஞர் உரை
பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும்; வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?
குறள் 436குற்றங்கடிதல் · The Correction of Faults
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
கலைஞர் உரை
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others
குறள் 434குற்றங்கடிதல் · The Correction of Faults
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
கலைஞர் உரை
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்
Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy
குறள் 435குற்றங்கடிதல் · The Correction of Faults
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
கலைஞர் உரை
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்
The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire
குறள் 433குற்றங்கடிதல் · The Correction of Faults
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
கலைஞர் உரை
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்
Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palmyra tree
குறள் 439குற்றங்கடிதல் · The Correction of Faults
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
கலைஞர் உரை
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது
Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things
தொடர்புடைய சூழல்கள் · Related situations