செருக்கும் பணிவும்
Thirukkural for pride and humility
வெற்றி வரும்போது செருக்கு தலைதூக்குவது இயல்பு. பணிவே பெரியோரின் அடையாளம் என்று வள்ளுவர் நினைவூட்டுகிறார்.
Success can quietly feed pride. Valluvar says humility is the mark of the truly great, and that it shines brightest in the successful.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 125அடக்கம் உடைமை · The Possession of Self-restraint
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
கலைஞர் உரை
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches
குறள் 978பெருமை · Greatness
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
கலைஞர் உரை
பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration
குறள் 979பெருமை · Greatness
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
கலைஞர் உரை
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness
குறள் 963மானம் · Honour
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
கலைஞர் உரை
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்
In great prosperity humility is becoming; dignity, in great adversity
குறள் 431குற்றங்கடிதல் · The Correction of Faults
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
கலைஞர் உரை
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust
தொடர்புடைய சூழல்கள் · Related situations