பொறாமை
Thirukkural for jealousy and envy
பிறரின் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமை எழுகிறதா? அது நமக்கே தீங்கு செய்யும் என்று வள்ளுவர் எச்சரித்து, மனத்தைத் தூய்மையாக்கச் சொல்கிறார்.
Feeling envy when someone else does well? Valluvar warns that envy harms the envious most, and shows the freedom of a heart without it.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 162அழுக்காறாமை · Not Envying
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
கலைஞர் உரை
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others
குறள் 165அழுக்காறாமை · Not Envying
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
கலைஞர் உரை
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்
To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction
குறள் 168அழுக்காறாமை · Not Envying
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
கலைஞர் உரை
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்
Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
குறள் 170அழுக்காறாமை · Not Envying
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
கலைஞர் உரை
பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
Never have the envious become great; never have those who are free from envy been without greatness
குறள் 161அழுக்காறாமை · Not Envying
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
கலைஞர் உரை
மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
தொடர்புடைய சூழல்கள் · Related situations