Thirukkural for a loving heart

அன்புள்ள மனம்

அன்பைக் காட்டத் தயங்குகிறீர்களா? அன்பே உயிரின் அடையாளம் என்றும், அன்புடையவர் தம்மையே பிறருக்குக் கொடுப்பர் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
Finding it hard to show love? Valluvar says love is what makes a life truly alive, and that the loving give even themselves to others.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 72 · அன்புடைமை · The Possession of Love
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
கலைஞர் உரை
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others
குறள் 80 · அன்புடைமை · The Possession of Love
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
கலைஞர் உரை
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin
குறள் 71 · அன்புடைமை · The Possession of Love
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.
கலைஞர் உரை
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within
குறள் 76 · அன்புடைமை · The Possession of Love
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
கலைஞர் உரை
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice
குறள் 78 · அன்புடைமை · The Possession of Love
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று.
கலைஞர் உரை
மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert