பிறருக்கு உதவுதலும் கொடையும்
Thirukkural for helping others and giving
யாருக்காவது உதவ வேண்டும் என்ற எண்ணமா? பசித்தவருக்கு ஈவதே சிறந்த செல்வப் பயன் என்று வள்ளுவர் பாராட்டுகிறார்.
Want to help someone in need? Valluvar says the best use of wealth is easing another’s hunger, and that giving brings a joy keeping never does.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 221ஈகை · Giving
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
கலைஞர் உரை
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்
To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return
குறள் 226ஈகை · Giving
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
கலைஞர் உரை
பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth
குறள் 211ஒப்புரவறிதல் · Duty to Society
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு.
கலைஞர் உரை
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?
குறள் 213ஒப்புரவறிதல் · Duty to Society
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
கலைஞர் உரை
பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ``ஒப்புரவு'' என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods
குறள் 227ஈகை · Giving
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
கலைஞர் உரை
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others
குறள் 228ஈகை · Giving
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
கலைஞர் உரை
ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?
தொடர்புடைய சூழல்கள் · Related situations