நேர்மையாகப் பொருள் ஈட்டுதல்
Thirukkural for earning money honestly
பணம் சம்பாதிக்க விரும்புவது தவறில்லை; அதை நேர்மையான வழியில் ஈட்டுவதே சிறப்பு என்று வள்ளுவர் கூறுகிறார்.
Wanting to earn more is no fault. Valluvar says money matters, but its worth lies in earning it by honest means.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 751பொருள் செயல்வகை · Way of Accumulating Wealth
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
கலைஞர் உரை
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance
குறள் 754பொருள் செயல்வகை · Way of Accumulating Wealth
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
கலைஞர் உரை
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness
குறள் 759பொருள் செயல்வகை · Way of Accumulating Wealth
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
கலைஞர் உரை
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it
குறள் 760பொருள் செயல்வகை · Way of Accumulating Wealth
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
கலைஞர் உரை
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்
To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)
குறள் 755பொருள் செயல்வகை · Way of Accumulating Wealth
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
கலைஞர் உரை
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love
தொடர்புடைய சூழல்கள் · Related situations