ஏமாற்றும் ஆசை
Thirukkural for being tempted to cheat or take what is not yours
எளிதாகப் பலன் பெற குறுக்கு வழி தெரிகிறதா? பிறர் பொருளை விரும்பும் பேராசையின் முடிவு அழிவே என்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
A shortcut is on offer, and it is not quite honest. Valluvar warns that wealth gained by fraud or by coveting what is not ours does not last.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 172வெஃகாமை · Not Coveting
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
கலைஞர் உரை
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained
குறள் 177வெஃகாமை · Not Coveting
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
கலைஞர் உரை
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது
Desire not the gain of covetousness In the enjoyment of its fruits there is no glory
குறள் 178வெஃகாமை · Not Coveting
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
கலைஞர் உரை
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்
If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness
குறள் 283கள்ளாமை · The Absence of Fraud
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
கலைஞர் உரை
கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase
குறள் 282கள்ளாமை · The Absence of Fraud
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
கலைஞர் உரை
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another
குறள் 171வெஃகாமை · Not Coveting
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
கலைஞர் உரை
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred
தொடர்புடைய சூழல்கள் · Related situations