Thirukkural for becoming careless after success

வெற்றிக்குப் பின் அலட்சியம்

வெற்றியின் மகிழ்ச்சியில் கவனம் தளர்கிறதா? மறதியும் அலட்சியமும் புகழை அழிக்கும்; விழிப்புடன் இருந்தால் எதுவும் அரிதல்ல என்கிறார் வள்ளுவர்.
Has success made you a little careless? Valluvar warns that forgetfulness wears away good fortune, and that with steady attention nothing is out of reach.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 531 · பொச்சாவாமை · Unforgetfulness
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
கலைஞர் உரை
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy
குறள் 535 · பொச்சாவாமை · Unforgetfulness
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
கலைஞர் உரை
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault
குறள் 539 · பொச்சாவாமை · Unforgetfulness
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
கலைஞர் உரை
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும்
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy
குறள் 537 · பொச்சாவாமை · Unforgetfulness
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்.
கலைஞர் உரை
மறதியில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour
குறள் 540 · பொச்சாவாமை · Unforgetfulness
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்.
கலைஞர் உரை
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it