மனக்கவலை நீங்க ஒரு பற்றுக்கோடு தேடுகிறீர்களா? இறைவனின் திருவடியைச் சேர்ந்தவர்க்குத் துன்பம் இல்லை என்று வள்ளுவர் நம்பிக்கையூட்டுகிறார்.
Looking for something to hold on to when the mind is restless? Valluvar opens the Kural by saying that those who rest in God are freed from worry.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 7 · கடவுள் வாழ்த்து · The Praise of God
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
கலைஞர் உரை
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை
Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable
குறள் 4 · கடவுள் வாழ்த்து · The Praise of God
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கலைஞர் உரை
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come
குறள் 1 · கடவுள் வாழ்த்து · The Praise of God
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கலைஞர் உரை
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world
குறள் 10 · கடவுள் வாழ்த்து · The Praise of God
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
கலைஞர் உரை
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
None can swim the great sea of births but those who are united to the feet of God
குறள் 8 · கடவுள் வாழ்த்து · The Praise of God
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கலைஞர் உரை
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue