வாழ்க்கையின் பொருள் என்ன என்று மனம் தேடுகிறதா? தோற்றத்தைத் தாண்டி மெய்யைக் காண்பதே அறிவு என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார்.
Searching for what life really means? Valluvar says true knowledge is seeing past appearances to what is real, and that clarity brings peace.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 355 · மெய்யுணர்தல் · Truth-Conciousness
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கலைஞர் உரை
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்
(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thing
குறள் 351 · மெய்யுணர்தல் · Truth-Conciousness
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
கலைஞர் உரை
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real
குறள் 358 · மெய்யுணர்தல் · Truth-Conciousness
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
கலைஞர் உரை
அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்
True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heaven
குறள் 352 · மெய்யுணர்தல் · Truth-Conciousness
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
கலைஞர் உரை
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)
குறள் 353 · மெய்யுணர்தல் · Truth-Conciousness
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
கலைஞர் உரை
ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்
Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt