Thirukkural for falling in love

காதல் மலரும்போது

சொல்லாமலே கண்கள் பேசும் காதலை உணர்கிறீர்களா? கண்ணோடு கண் இணைந்தால் வார்த்தைகள் தேவையில்லை என்று வள்ளுவர் அழகாகப் பாடுகிறார்.
Feeling a love the eyes speak before words do? Valluvar writes tenderly of shy looks and smiles, and of a bond as close as body and soul.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 1100 · குறிப்பறிதல் · Recognition of the Signs
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.
கலைஞர் உரை
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)
குறள் 1122 · காதற் சிறப்புரைத்தல் · Declaration of Love"s special Excellence
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.
கலைஞர் உரை
உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை; அத்தகையதுதான் எமது உறவு
The love between me and this damsel is like the union of body and soul
குறள் 1094 · குறிப்பறிதல் · Recognition of the Signs
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.
கலைஞர் உரை
நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?
When I look, she looks down; when I do not, she looks and smiles gently
குறள் 1090 · தகை அணங்குறுத்தல் · The Pre-marital love
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.
கலைஞர் உரை
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at
குறள் 1091 · குறிப்பறிதல் · Recognition of the Signs
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
கலைஞர் உரை
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof