Thirukkural for people talking about your love

காதலைப் பற்றிய ஊர்ப்பேச்சு

உங்கள் காதலைப் பற்றி ஊர் பேசுகிறதா? ஊர்ப்பேச்சு காதலை அணைப்பதில்லை; நெய் ஊற்றிய நெருப்புபோல் வளர்க்கவே செய்யும் என்கிறார் வள்ளுவர்.
Is everyone talking about your relationship? Valluvar observes that gossip never puts out love; like ghee on a fire, it only makes it burn brighter.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 1148 · அலர் அறிவுறுத்தல் · The Announcement of the Rumour
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல்.
கலைஞர் உரை
ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்
To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee
குறள் 1146 · அலர் அறிவுறுத்தல் · The Announcement of the Rumour
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.
கலைஞர் உரை
காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent
குறள் 1142 · அலர் அறிவுறுத்தல் · The Announcement of the Rumour
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
கலைஞர் உரை
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me
குறள் 1144 · அலர் அறிவுறுத்தல் · The Announcement of the Rumour
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து.
கலைஞர் உரை
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away