சேர்த்து வைப்பதிலேயே வாழ்க்கை கழிகிறதா? தானும் அனுபவிக்காமல், பிறருக்கும் கொடுக்காத செல்வம் வீணே என்கிறார் வள்ளுவர்.
Is life going into saving and never spending? Valluvar says wealth that is neither enjoyed nor shared is wealth wasted.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 1005 · நன்றியில் செல்வம் · Wealth without Benefaction
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
கலைஞர் உரை
கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை
Those who neither give (to others) nor enjoy (their property) are (truly) destitute, though possessing immense riches
குறள் 1001 · நன்றியில் செல்வம் · Wealth without Benefaction
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
கலைஞர் உரை
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)
குறள் 1006 · நன்றியில் செல்வம் · Wealth without Benefaction
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
கலைஞர் உரை
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth
குறள் 1009 · நன்றியில் செல்வம் · Wealth without Benefaction
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
கலைஞர் உரை
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்
To heap up glittering wealth, their hoards shall others take
குறள் 1007 · நன்றியில் செல்வம் · Wealth without Benefaction
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
கலைஞர் உரை
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது
The wealth of him who never bestows anything on the destitute is like a woman of beauty growing old without a husband