சுயமரியாதை
Thirukkural for self-respect and dignity
மதிப்பு குறையும்படி நடத்தப்படுகிறீர்களா? தன்மானத்தைக் காப்பதன் பெருமையையும் இழிவைத் தவிர்க்கும் வழியையும் வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
Are you being treated in a way that wears down your dignity? Valluvar speaks of guarding self-respect and refusing to follow those who scorn you.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 962மானம் · Honour
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
கலைஞர் உரை
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈடுபடமாட்டார்
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame
குறள் 963மானம் · Honour
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
கலைஞர் உரை
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்
In great prosperity humility is becoming; dignity, in great adversity
குறள் 964மானம் · Honour
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
கலைஞர் உரை
மக்களின் நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head
குறள் 966மானம் · Honour
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
கலைஞர் உரை
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?
Why follow men who scorn, and at their bidding wait?
குறள் 965மானம் · Honour
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
கலைஞர் உரை
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing
தொடர்புடைய சூழல்கள் · Related situations