பேசிய பிறகு வருந்துகிறீர்களா? பயனுள்ளதை மட்டும் பேசுவதே சொல்லுக்கு மதிப்பு தரும் என்று வள்ளுவர் மென்மையாக நினைவூட்டுகிறார்.
Ever regret how much you said? Valluvar gently reminds us that words carry weight when we speak only what is useful.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 200 · பயனில சொல்லாமை · Against Vain Speaking
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
கலைஞர் உரை
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
Speak what is useful, and speak not useless words
குறள் 191 · பயனில சொல்லாமை · Against Vain Speaking
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
கலைஞர் உரை
பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
He who to the disgust of many speaks useless things will be despised by all
குறள் 197 · பயனில சொல்லாமை · Against Vain Speaking
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
கலைஞர் உரை
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது
Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things
குறள் 195 · பயனில சொல்லாமை · Against Vain Speaking
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
கலைஞர் உரை
நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்
If the good speak vain words their eminence and excellence will leave them
குறள் 198 · பயனில சொல்லாமை · Against Vain Speaking
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
கலைஞர் உரை
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்
The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them