Thirukkural for wisdom and good judgment

அறிவும் தெளிவும்

முடிவெடுக்கத் தடுமாறுகிறீர்களா? யார் சொன்னாலும் அதன் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு என்று வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.
Unsure what to make of things? Valluvar says wisdom is weighing what you hear, whoever says it, and seeing the truth in it.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 423 · அறிவுடைமை · The Possession of Knowledge
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
கலைஞர் உரை
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom
குறள் 422 · அறிவுடைமை · The Possession of Knowledge
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு.
கலைஞர் உரை
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom
குறள் 421 · அறிவுடைமை · The Possession of Knowledge
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.
கலைஞர் உரை
பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்
Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroy
குறள் 429 · அறிவுடைமை · The Possession of Knowledge
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.
கலைஞர் உரை
வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது
No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evils
குறள் 430 · அறிவுடைமை · The Possession of Knowledge
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.
கலைஞர் உரை
அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing
குறள் 426 · அறிவுடைமை · The Possession of Knowledge
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு.
கலைஞர் உரை
உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்
To live as the world lives, is wisdom