நன்றியறிதல்
Thirukkural for gratitude and forgotten favours
செய்த உதவியை மறந்தவர்களால் வருந்துகிறீர்களா, அல்லது நன்றி சொல்ல வழி தேடுகிறீர்களா? செய்ந்நன்றியின் பெருமையை வள்ளுவர் உணர்த்துகிறார்.
Hurt that someone forgot your help, or looking for a way to say thank you? Valluvar teaches how precious a kindness is, however small.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 101செய்ந்நன்றியறிதல் · Gratitude
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
கலைஞர் உரை
``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received
குறள் 102செய்ந்நன்றியறிதல் · Gratitude
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
கலைஞர் உரை
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world
குறள் 104செய்ந்நன்றியறிதல் · Gratitude
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
கலைஞர் உரை
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit
குறள் 106செய்ந்நன்றியறிதல் · Gratitude
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
கலைஞர் உரை
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது
Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless
குறள் 110செய்ந்நன்றியறிதல் · Gratitude
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
கலைஞர் உரை
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit
தொடர்புடைய சூழல்கள் · Related situations