இழப்பும் துயரமும்
Thirukkural for grief and loss
அன்புக்குரியவரை இழந்த துயரத்தில் இருக்கிறீர்களா? வாழ்வின் நிலையாமையையும் துன்பத்தை ஏற்கும் மன அமைதியையும் வள்ளுவர் மென்மையாக நினைவூட்டுகிறார்.
If you are grieving someone you lost, these kurals reflect gently on the impermanence of life and on bearing sorrow with a quiet heart.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 336நிலையாமை · Instability
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
கலைஞர் உரை
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்
This world possesses the greatness that one who yesterday was is not today
குறள் 339நிலையாமை · Instability
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
கலைஞர் உரை
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு
Death is like sleep; birth is like awaking from it
குறள் 627இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
கலைஞர் உரை
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble
குறள் 628இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
கலைஞர் உரை
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man)
குறள் 622இடுக்கண் அழியாமை · Hopefulness in Trouble
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
கலைஞர் உரை
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow
தொடர்புடைய சூழல்கள் · Related situations