Thirukkural for farming and agriculture

உழவும் விவசாயமும்

உழவுத் தொழில் கடினமானதுதான். ஆனாலும் உலகத்தையே தாங்கும் அச்சாணி உழவர்கள் என்று வள்ளுவர் உழவைப் போற்றுகிறார்.
Farming is hard work. Valluvar honours it above all, calling farmers the linchpin that holds up the whole world.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 1031 · உழவு · Farming
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.
கலைஞர் உரை
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது
Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer
குறள் 1032 · உழவு · Farming
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.
கலைஞர் உரை
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்
Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil
குறள் 1033 · உழவு · Farming
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
கலைஞர் உரை
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life
குறள் 1035 · உழவு · Farming
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.
கலைஞர் உரை
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg
குறள் 1038 · உழவு · Farming
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு.
கலைஞர் உரை
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)
குறள் 1040 · உழவு · Farming
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.
கலைஞர் உரை
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்
The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life