குடும்பப் பொறுப்பு தோளில் கனக்கிறதா? குடும்பத்தை உயர்த்த உழைப்பவருக்குத் தெய்வமே துணை நிற்கும் என்று வள்ளுவர் தோள் கொடுக்கிறார்.
Carrying the weight of your family? Valluvar honours those who work to lift their family, and says even the gods stand by them.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 1021 · குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
கலைஞர் உரை
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது
There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family)
குறள் 1023 · குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
கலைஞர் உரை
தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்
The Deity will clothe itself and appear before him who resolves on raising his family
குறள் 1022 · குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
கலைஞர் உரை
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances
குறள் 1029 · குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
கலைஞர் உரை
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்
Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?
குறள் 1026 · குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
கலைஞர் உரை
நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்
A man's true manliness consists in making himself the head and benefactor of his family
குறள் 1028 · குடிசெயல் வகை · The Way of Maintaining the Family
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
கலைஞர் உரை
தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்
As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family