நீங்கள் நேசிப்பவர் உங்களை நேசிக்கவில்லையா? இருபக்கமும் இருந்தால்தான் காதல் இனிக்கும் என்று சொல்லி, உங்கள் வலியை வள்ளுவர் புரிந்துகொள்கிறார்.
Loving someone who does not love you back? Valluvar knows the ache: love, like a carrying pole, is sweet only when both sides share the weight.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
குறள் 1196 · தனிப்படர் மிகுதி · The Solitary Anguish
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
கலைஞர் உரை
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both
குறள் 1192 · தனிப்படர் மிகுதி · The Solitary Anguish
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள க்கும் அளி.
கலைஞர் உரை
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it
குறள் 1199 · தனிப்படர் மிகுதி · The Solitary Anguish
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
கலைஞர் உரை
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears
குறள் 1195 · தனிப்படர் மிகுதி · The Solitary Anguish
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
கலைஞர் உரை
நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?
He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?
குறள் 1200 · தனிப்படர் மிகுதி · The Solitary Anguish
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
கலைஞர் உரை
நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்
Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow)