தொலைவில் இருப்பவர் திரும்பி வரும் நாளுக்காகக் காத்திருக்கிறீர்களா? ஒரு நாள் ஏழு நாள்போல் நீளும் அந்தக் காத்திருப்பை வள்ளுவர் நெஞ்சைத் தொடும்படி சொல்கிறார்.
Counting the days until someone comes home? Valluvar captures that waiting, when a single day feels as long as seven, and the joy of the return.
இதற்கான குறள்கள் · Kurals for this situation
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
கலைஞர் உரை
நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்
To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
கலைஞர் உரை
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன
My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
கலைஞர் உரை
காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம், மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது
My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
கலைஞர் உரை
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
கலைஞர் உரை
ஊக்கத்தையே உறுதுணையாகக் கொண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்
I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide