Thirukkural for welcoming guests

விருந்தோம்பல்

வீட்டுக்கு வரும் விருந்தினரை அன்போடு வரவேற்பது தமிழர் பண்பு. முகம் மலர்ந்த வரவேற்பின் மதிப்பை வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்.
Welcoming guests warmly is an old Tamil value. Valluvar shows how much a smiling face and an open home mean to those who come to your door.

இதற்கான குறள்கள் · Kurals for this situation

குறள் 81 · விருந்தோம்பல் · Hospitality
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
கலைஞர் உரை
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality
குறள் 90 · விருந்தோம்பல் · Hospitality
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து.
கலைஞர் உரை
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்
As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away
குறள் 86 · விருந்தோம்பல் · Hospitality
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு.
கலைஞர் உரை
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven
குறள் 84 · விருந்தோம்பல் · Hospitality
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.
கலைஞர் உரை
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests
குறள் 83 · விருந்தோம்பல் · Hospitality
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.
கலைஞர் உரை
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty